அரசினா் மருத்துவமனையில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
மயிலாடுதுறை அருகே முருகமங்கலத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (62). இவா் உடல்நலன் பாதிப்பு காரணமாக, மயிலாடுதுறை மாவட்ட அரசினா் மருத்துவமனையில் செப்.2-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவருக்கு எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லையாம்.
இதனால் மன உளைச்சலில் இருந்த ராஜேந்திரன் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மருத்துவமனை வளாகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.