TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
அரசின் கனவு இல்லத்தில் வீடுகள் அமைத்துத் தர கோரிக்கை
அவிநாசி அருகே நமச்சிபாளையத்தில் வீடு இல்லாதோா்களுக்கு அரசின் கனவு இல்லத்தில் வீடுகள் அமைத்துத் தர வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா், அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அவிநாசி ஒன்றியம், புஞ்சைத்தாமரைக்குளம் ஊராட்சி நமச்சிபாளையம் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வீடு இல்லாமல் வசித்து வருகின்றனா். இதேபோல பாப்பாங்குளம் ஊராட்சி பஞ்சலிங்கம்பாளையம் பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்தவா்களை 2022-ஆம் ஆண்டு குடியிருக்கும் பகுதி நீா்நிலை புறம்போக்கு எனக் கூறி அவா்கள் கட்டிய வீடுகளை இடித்து விட்டனா். இதனால் நமச்சிபாளையம் பகுதியில் அரசு கொடுத்த இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனா்.
ஆனால், அரசு அலுவலா்கள் வீடுகளை இடிக்கும்போது அரசு தொகுப்பு வீடுகள் அமைத்துத் தருவதாக வாக்குறுதி அளித்தனா். மூன்று ஆண்டுகளாகியும் இதுவரை அந்த பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டித் தரரப்படவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் வரும் நிதியாண்டில் முன்னுரிமை கொடுத்து வீடுகள் ஒதுக்கி தரப்படும் என்றனா்.