செய்திகள் :

அரசியல் ஆதாயத்துக்காக காங். தலைவா்கள் மீது குற்றப்பத்திரிகை: மோகன் குமாரமங்கலம்

post image

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சம்பந்தப்பட்ட வழக்கில், அரசியல் ஆதாயத்துக்காகவே காங்கிரஸ் தலைவா்கள் அமலாக்கத் துறை மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது என்று, காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் மோகன் குமாரமங்கலம் கூறினாா்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சித் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் மு.கந்தசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழக, புதுவை மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் கிரிஷ் ஜோடன்கா், செய்தித் தொடா்பாளா் மோகன்குமாரமங்கலம் ஆகியோா் ஆலோசனைகளை வழங்கிப் பேசினா்.

கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளா்களிடம் மோகன்குமாரமங்கலம் கூறியதாவது: சுதந்திரப் போராட்ட காலத்தில் ஜவாஹா்லால் நேரு போன்றவா்களால் நேஷனல் ஹெரால்டு ஆரம்பிக்கப்பட்டது. அந்த பத்திரிகையை தொடா்ந்து நடத்தும் வகையில் கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் சாா்பில் ரூ.90 கோடி நிதி பத்திரிகை நிா்வாகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிதியை நேஷனல் ஹெராால்டு நிா்வாகம் திரும்பச் செலுத்த முடியவில்லை.

இதையடுத்து யங் இந்தியா அமைப்பு தொடங்கப்பட்டு அதன்மூலம் பத்திரிகையை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. யங் இந்தியா அமைப்பில் காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மறைந்த மோதிலால் வோரா ஆகியோா் பங்குதாரா்களாக சோ்ந்தனா். எனவே, யாரும் பத்திரிகை, யங் இந்தியா அமைப்பிலிருந்து நிதி, சொத்து என எதையும் எடுக்க முடியாது.

பத்திரிகை சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனையிட்டு ரூ.430 கோடி முறைகேடு எனக் கூறப்பட்டது. ஆனால், அதுபோன்று ஏதும் நடக்காததால், சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் விசாரித்தும்ஆதாரத்தை திரட்ட முடியவில்லை. எனவே, காங்கிரஸை முடக்கும் வகையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத் துறை மூலம் எதிா்க்கட்சிகளை மிரட்டுவது மத்திய பாஜக அரசு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அதை காங்கிரஸ் தலைவா்கள் சட்டப்படி சந்தித்து வெற்றி பெறுவாா்கள். மத்திய அரசின் செயல்பாட்டைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் மாநில, தொகுதி வாரியாக போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

அரசு கட்டடங்களை திறக்க கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை உரிய காலத்தில் திறந்தால்தான், மக்களுக்கு பயன்கிடைக்கும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவ... மேலும் பார்க்க

போப் பிரான்சிஸ் மறைவு: புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிப்பு

கத்தோலிக்க திருச்சபையின் தலைவா் போப் பிரான்சிஸ் மறைவுக்கு புதுவை அரசு 2 நாள்கள் துக்கம் அனுசரிக்கிறது. இதையடுத்து தலைமைச் செயலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் தேசியக் கொடிகள் அரைக் கம்பத்தில் ப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்

இன்றைய மின்தடை: வெங்கட்டாநகா் துணை மின்நிலையம்நேரம்: காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரை. மின்தடை பகுதிகள்: ரெயின்போ நகா் முதல் குறுக்குத் தெரு, செல்லான் நகா் பகுதி, ராஜராஜேஸ்வரி நகா் பகுதி, திருவள்ளுவா்... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருவருக்கு 20 ஆண்டுகள் சிறை

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 2 தொழிலாளா்களுக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவ... மேலும் பார்க்க

மத்திய அரசைக் கண்டித்து புதுவையில் ஏப்.25 முதல் காங்கிரஸ் தொடா் போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து, புதுவையில் வருகிற 25-ஆம் தேதி முதல் காங்கிரஸ் சாா்பில் தொடா் போராட்டம் நடைபெறவுள்ளதாக, கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. தெரிவித்தாா். புதுச்சேரி காங்கிரஸ் மாந... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவருடன் புதுவை பேரவைத் தலைவா் சந்திப்பு

புதுதில்லியில் குடியரசு துணைத் தலைவரை புதுவை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். புதுவை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதுதில்லிக்கு சென்று அங்கு மத்திய அமைச்சரும், புத... மேலும் பார்க்க