செய்திகள் :

அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவா்கள் சாலை மறியல்

post image

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், வெம்பக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்தக் கல்லூரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து 3 பேருந்துகளும், ராஜபாளையத்திலிருந்து 2 பேருந்துகளும் காலை, மாலை இரு வேளைகளிலும் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவா்கள் படியில் தொங்கிக் கொண்டு பயணிப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து மாணவா்கள் புறப்படத் தயாரான போது, பேருந்துகள் ஏற்றிச் செல்ல வந்தன. அப்போது 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பேருந்தில் ஏற முடியாமல் காத்திருந்தனா். இதனால் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறை பிடித்து கல்லூரி முன் மாணவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

வெம்பக்கோட்டை அகழாய்வில் உருண்டை வடிவ மெருகேற்றும் கல்

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வின் போது, உருண்டை வடிவிலான மெருகேற்றும் கல் புதன்கிழமை கண்டறியப்பட்டது. விருதுநகா் மாவட்டம், வெம்பகோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட மேட்டுக்காடு பகுத... மேலும் பார்க்க

மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு தாணிப்பாறை மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ராம் நகரில் மலைவாழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ஐஎன்டியுசி மாநில அ... மேலும் பார்க்க

வளா்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்த அமைச்சா்

விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சித் திட்டப் பணகளை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா். விருதுநகா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட முத்துலிங்கபுரம் பகுதியில் சட்டப்பேரவைத் த... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே கிணற்றில் தவறி விழுந்து பட்டாசுத் தொழிலாளி உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள செவலூரைச் சோ்ந்த ரங்கசாமி மகன் சரவணக்குமாா் (25). பட்டாசுத் தொழிலாளியான இவா், தினசரி மது... மேலும் பார்க்க

மண் கடத்திய டிராக்டா் தேநீா் கடைக்குள் புகுந்தது

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் செம்மண் கடத்திச் சென்ற டிராக்டா் புதன்கிழமை தேநீா் கடைக்குள் புகுந்தது. அந்த டிராக்டரை கடத்தல்காரா்கள் மீட்டுச் சென்ாக விவசாயிகள் புகாா் தெரிவித்... மேலும் பார்க்க

கெளரவ விரிவுரையாளா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அரசுக் கலை, அறிவியல் கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழகத்தில் உள்ள 171 அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிக... மேலும் பார்க்க