கை, கால்களில் விலங்கிட்டனர்: அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்கள் தகவல்
அரசுக் கல்லூரி மாணவா்கள் சாலை மறியல்
குடிநீா், கழிப்பறை வசதிகள் கோரி கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கடலூா், தேவனாம்பட்டினத்தில் செயல்பட்டு வரும் பெரியாா் அரசு கலைக் கல்லூரியில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். அங்குள்ள பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கான விடுதியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா்.
இந்த விடுதியில் கடந்த 10 மாதங்களாக பாதுகாக்கப்பட்ட குடிநீா், கழிப்பறை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்கவில்லையாம். இதனால், அதிருப்தியடைந்த மாணவா்கள் தூய்மையான குடிநீா், கழிப்பறை வசதிகள் மற்றும் தரமான உணவு வழங்க வலியுறுத்தி, கல்லூரி எதிரே உள்ள கடற்கரைச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த தேவனாம்பட்டினம் போலீஸாா் நிகழ்விடம் சென்று பேச்சு வாா்த்தை நடத்தினா். அப்போது, இதுதொடா்பாக அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என போலீஸாா் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்துச் சென்றனா்.