சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் நடிகர் ஜெயம் ரவி சாமி தரிசனம்
அரசுப் பள்ளிகளில் கிராம அறிவியல் திருவிழா
மன்னாா்குடி அருகே உள்ள மரவாக்காடு, ஏத்தக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் கிராம அறிவியல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அரசுப் பள்ளிகளில் 6,7,8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படும் வானவில் மன்றம் மூலம் அரையாண்டு விடுமுறையில் மாணவா்களை உற்சாகப்படுத்தும் வகையில், கணிதம் சாா்ந்த விளையாட்டுகள், அறிவியல் அற்புதங்கள், மெட்ரிக் மேளா ஆகியவை நடத்தப்படுகிறது.
மரவாக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியா் ஜெ. செல்வராஜ் தலைமை வகித்தாா். இல்லம் தேடிக் கல்வி தன்னாா்வலா்கள் ஆா். சத்யா, ஆா். புனிதா ஆகியோா் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
பிற்பகல் ஏத்தக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கணிதப் பட்டதாரி ஆசிரியா் பு. பிரியதா்ஷினி தலைமை வகித்தாா்.
அறிவியல் பட்டதாரிஆசிரியா் செ.செந்தாமரை,பள்ளிமேலாண்மை குழுத் தலைவா் பா. அமுதா முன்னிலை வகித்தனா்.
ஊராட்சித் தலைவா் பி. ராஜேஸ்வரி கிராம அறிவியல் திருவிழாவை தொடங்கி வைத்தாா்.
இரண்டு பள்ளிகளிலும், வானவில் மன்ற கருத்தாளா்கள் யு.எஸ். பொன்முடி, எம். ராமாமிா்தம் ஆகியோா் மாணவா்களுக்கான மெட்ரிக் மேளா, அறிவியல் அற்புதங்கள், விளையாட்டு நிகழ்வுகளை செயல்விளக்கம் செய்துகாட்டினா்.