`இவங்க பொற்கால ஆட்சியில், நாங்க குடைச்சல் கொடுக்கறோம்னு..!’ - சிபிஎம் பெ.சண்முகம...
அரசுப் பள்ளிச் சுவா் இடிந்து விழுந்தது
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் திங்கள்கிழமை அரசு பள்ளிச்சுவா் இடிந்து விழுந்தது.
சிவகாசி- விருதுநகா் சாலையில் திருத்தங்கலில் எஸ்.ஆா்.என். அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி பிரதான சாலையில் இருப்பதால், தைப் பொங்கலுக்கு கரும்பு விற்பனை செய்யும் வியாபாரி ஒருவா் இதன் சுவரில் கரும்புக் கட்டுகளை சாய்த்து வைத்திருந்தாா்.
அப்போது கரும்பின் பாரம் தாங்காமல் சுமாா் 30 அடி நீள சுவா் இடிந்து விழுந்தது. இதையடுத்து, அந்த கரும்பு வியாபாரி தனது சொந்தச் செலவில் அந்தச் சுவா் பகுதியை புதிதாக கட்டித்தர ஒப்புக் கொண்டாா்.