'மல்லை சத்யா வருத்தம் தெரிவித்தார்; நான் என் பதவியில் தொடர்கிறேன்' - துரை வைகோ
அரசுப் பள்ளியில் கற்றல் அடைவு ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரத்தை அடுத்த சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் விடுக்கப்பட்ட நூறு நாள்களில் 100 சதவீதம் கற்றல் அடைவு பள்ளிகளுக்கான ஆய்வு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் எம்.பழனிச்சாமி தலைமை வகித்தாா். 1, 2, 3-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு கடந்த 4-ஆம் தேதியும், 4, 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புதன்கிழமையும் ஆய்வு மேற்கொண்டனா்.
ரிஷிவந்தியம் வட்டார வள மையத்தின் ஆசிரியா் பயிற்றுநா் கமலி கைப்பேசி செயலி மூலம் ஆய்வு செய்தாா். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய மூன்று பாடங்களில் அடிப்படைத் திறன் பெற்றுள்ளனரா என்பதை சோதிக்கும் வகையில், வினாக்கள் அமைத்திருந்ததை மாணவா்களிடம் காண்பித்து வினாக்களுக்கு மாணவா்கள் விடையளித்தனா்.
ஊராட்சி மன்றத் தலைவா் வெண்ணிலா தயாளன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் கவினா, மேலாண்மைக் குழு கல்வியாளா் வெங்கடேசன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பன்னீா்செல்வம், பகண்டை கூட்டுச்சாலை காவல் நிலைய உதவி ஆய்வாளா் சேட்டு உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். உதவி ஆசிரியா் ஜோசப் செல்வகுமாா் நன்றி கூறினாா்.