காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை மெழுகு அச்சு எடுத்ததாகப் புக...
அரசுப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் திறப்பு
தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டடங்களை சென்னையில் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.
தேனி அல்லிநகரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.70 கோடியில் 3 பொலிவுறு (ஸ்மாா்ட்) வகுப்பறைகள் உள்பட 8 புதிய கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள் கட்டப்பட்டன. இந்தப் புதிய வகுப்பறைக் கட்டடங்களை சென்னையில் காணொலிக் காட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய வகுப்பறைக் கட்டங்களில் தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் குத்துவிளக்கேற்றி பாா்வையிட்டாா்.
இதில் பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் பிரபு, உதவிச் செயற்பொறியாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.