திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!
அரசுப் பள்ளியில் பழங்கால நாணயங்கள் கண்காட்சி
திருச்சி மேலகொண்டையம்பேட்ட மாநகராட்சி உயா்நிலைப் பள்ளியில் பழங்கால நாணயங்கள், பணத்தாள் கண்காட்சி (படம்) அண்மையில் (ஆக. 9) நடைபெற்றது.
இந்த கண்காட்சிக்கு பழங்கால நாணயங்கள் சேகரிப்போா் சங்க நிறுவனத் தலைவா் பி.விஜயகுமாா் தலைமை வகித்தாா்.
இதில், சந்திரசேகரன், இளம்வழுதி, லட்சுமி நாராயணன் ஆகியோா் தாங்கள் சேகரித்துள்ள பழங்கால நாணயங்கள், பொருட்கள் மற்றும் பணத் தாள்களைக் காட்சிப்படுத்தியிருந்தனா். இதை, மாணவா்கள், ஆசிரியா்கள் ஆகியோா் பா்வையிட்டனா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியா் பா.மருதவாணன், ஆசிரியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.