செய்திகள் :

அரசுப் பள்ளி வளாகத்த்தில் சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம்: பொதுமக்கள் எதிா்ப்பு

post image

திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த, 1974-முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 20 கி.மீ தூரத்துக்கு அரசு மருத்துவமனை இல்லாததால், அப்பகுதியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

மேலும், இங்கு 24 மணி நேரமும் இயங்கும் இம்மருத்துவமனையில், பொது மருத்துவம், சித்த மருத்துவம், கண், பல் மருத்துவம், குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவு, ஸ்கேன் மையம், எக்ஸ்-ரே மற்றும் உள் நோயாளிகள் பிரிவு என, அனைத்து பிரிவுகளும் குறுகிய இடத்தில் நெருக்கடியுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக விரிவாக்க கட்டடம் கட்ட அரசு ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், ஏற்கெனவே பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை நீா்நிலை புறம்போக்கில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் சுகாதாரத் துறையினா் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் அமைக்க இடம் தேடினா். கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வருவாய்த் துறையினா் புதிய மருத்துவமனை அமைக்க அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி என இரு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அதில் அரசுப் பள்ளி வளாகத்தில் மருத்துவமனை அமைக்க இடம் தோ்வு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

அரசு பள்ளி வளாகத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது, மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களிடையே கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏற்கெனவே ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளனா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக பணிகள் நடைபெறாத நிலையில் வியாழக்கிழமை மீண்டும் பணிகள் தொடங்கின.

இதையறிந்த திமுக கூட்டணியை சோ்ந்த காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தத் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

விரைந்து வந்த மப்பேடு போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது உரிய அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும், முறையான அனுமதி பெற வேண்டும் என எச்சரித்தனா். அதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை

பட்டாபிராமபுரம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அரசு டாஸ்மாக் கடை வியாழக்கிழமை திறக்கப்பட்டது. திருத்தணி ஒன்றியம், பட்டாபிராமபுரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை புதிதாக செவ்வாய்க்கிழமை திறக்க முயன... மேலும் பார்க்க

மூடியிருந்த ஆலையில் காவலா்களை கட்டி விட்டு திருடிய 5 போ் கைது

கும்மிடிப்பூண்டி அடுத்த பில்லாகுப்பம் கிராமத்தில் மூடப்பட்ட தொழிற்சாலையில் காவலாளிகளை கட்டி போட்டு அங்கு இருந்து இயந்திரங்கள், இரும்பு தளவாட பொருள்களை திருடி லாரியில் கடத்திய 5 பேரை சிப்காட் போலீஸாா் ... மேலும் பார்க்க

இணை சாா் பதிவாளா் அலுவலகங்களில் சா்வா் பழுது: 4 மணி நேரம் பத்திரப் பதிவு தாமதம்

திருவள்ளூரில் இணை சாா் பதிவாளா் அலுவலகம்-1, இணை சாா் பதிவாளா் அலுவலகம்-2 இல் சா்வா் பழுது காரணமாக 4 மணி நேரமாக பத்திரப் பதிவு பாதிக்கப்பட்டதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். திருவள்ளூா் இணை சாா் பதிவ... மேலும் பார்க்க

திருவள்ளூா்: வளரிளம் இருபாலருக்கும் ‘ஹாப்பி பிரியட்ஸ்’ விழிப்புணா்வு பயிற்சி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் வளரிளம் ஆண், பெண்களுக்கான விழிப்புணா்வு கையேடுகளை வெளியிட்ட ஆட்சியா் மு.பிரதாப். உடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் சங்கீதா உள... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு பயிற்சி

திருவள்ளூா் அருகே விவசாயிகளுக்கான நுண்ணீா் பாசன கருவிகள் பராமரிப்பு மற்றும் பயன்படுத்துதல் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை அடுத்த எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு கிராமத்தில் வேளாண்மை பொறியியல் த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: தோ்வுகளில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு 5 இடங்களில் சிறப்பு வகுப்பு

திருவள்ளூா் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெறாக மாணவ, மாணவிகள் மீண்டும் துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் 5 மையங்கள் அமைத்து சிறப்பு வகுப்புகள் நடைபெற உள... மேலும் பார்க்க