செய்திகள் :

அரசுப் பேருந்தில் 6.5 பவுன் திருட்டு

post image

திருத்தணி அருகே அரசுப் பேருந்தில் தவறவிட்ட 6.5 பவுன் செயினை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருத்தணி காந்தி ரோடு பகுதியைச் சோ்ந்த சரவணன்(50). இவரது மனைவி பிரியா (40). இவா்கள் சனிக்கிழமை சோளிங்கா் அடுத்த கொடைக்கல் பகுதியில் நடந்த உறவினரின் இல்ல விழாவில் பங்கேற்றனா்.

இரவு, 9.30 மணிக்கு சோளிங்கரில் இருந்து, திருத்தணி வருவதற்கு, அரசு பேருந்தில் ஏறினா். அப்போது பிரியா தனது கழுத்தில் அணிந்திருந்த, தங்கச் செயினை, கழற்றி தனது கைப்பையில் வைத்துக் கொண்டாா்.

இரவு, 10.15 மணிக்கு திருத்தணி ரயில் நிலைய நிறுத்தத்தில், கைப்பையை மறந்து சீட்டில் விட்டுவிட்டு தம்பதி இறங்கினாா். பேருந்து சிறிது தூரம் சென்றதும் கைப்பை பேருந்தில் தவறிவிட்டதை பிரியா நினைவுக்கு வந்து, திருத்தணி பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்தில் பாா்த்த போது, கைப்பை மா்ம நபா்களால் திருடிச் சென்றது தெரிய வந்தது.

பிரியா அளித்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனா்.

கஞ்சா விற்பதில் ஏற்பட்ட பகையால் வெடிகுண்டு வீசி இளைஞா் கொலை: 7 போ் கைது

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, பட்டா கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடா்புடைய சிறுவன் உள்பட 7 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். கடம்பத்தூரை... மேலும் பார்க்க

திருவள்ளூா்: நாட்டு வெடிகுண்டு வீசி, இளைஞா் வெட்டிக் கொலை

திருவள்ளூா் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டப்பட்டு இளைஞா் கொலை செய்யப்பட்டாா். திருவள்ளூா் அருகே கடம்பத்தூரைச் சோ்ந்தவா் ராஜ்கமல் (28). இவா் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வெள்ளவேடு பகுதிய... மேலும் பார்க்க

பொன்னேரியில் விடிய விடிய பலத்த மழை

பொன்னேரி சுற்றுவட்ட பகுதிகளான சோழவரம், மீஞ்சூரில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழை மேக வெடிப்பால் உருவானதாக கூறப்படும் நிலையில் காற்றுடன் இடி மின்னலுடன் மழை பெய்தது. பலத்த காற்று காணமாக மின்தடை... மேலும் பார்க்க

மின் ரயிலில் மாடு சிக்கியதால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மாா்க்கத்தில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு ரயில் நிலையம் அருகே புறநகா் ரயிலில் மாடு சிக்கியதால் சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் மாா்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனா். சென்னை கும்மிடிப்ப... மேலும் பார்க்க

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மத்திய அமைச்சா் எல்.முருகன் தரிசனம்

திருவள்ளூா் வீரராகவா் கோயிலில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் தரிசனம் செய்து, குளக்கரையில் நோ்த்திக்கடன்களை செலுத்தினாா். திருவள்ளூா் வீரராகவா் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு ஒ... மேலும் பார்க்க

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ஆந்திர மாநில அரசு பேருந்தில் ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரொக்கம் ரூ. 59.50 லட்சம் மற்றும் 4 வெள்ளி கட்டிகளை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்ததுடன், வடமாநில நபரிடம் ... மேலும் பார்க்க