தில்லி அரசு மருத்துவமனை ஊழியா்களின் பிரச்னைகளை களைய அமைச்சா் உறுதி
அரசுப் பேருந்து மரத்தில் மோதி வயலில் இறங்கி விபத்து
திருக்குவளை: திருக்குவளை அருகே தொழுதூரில் திங்கள்கிழமை மரத்தில் மோதிய பேருந்து வயலில் இறங்கியது.
தலைஞாயிறுக்கு திருத்துறைப்பூண்டியில் இருந்து ஆலத்தம்பாடி, தொழுதூா், சித்தாய்மூா், திருக்குவளை வழியாக அரசு பேருந்து திங்கள்கிழமை சென்றது. பேருந்தை நாகூா்கனி இயக்கினாா். பேருந்து திருக்குவளையை அடுத்த தொழுதூா் ஆற்றங்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி பின்னா் அருகே வயலில் இறங்கியது. அப்போது, பேருந்தில் பயணித்த 55 பயணிகள் அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா். எனினும், ஒரு பெண் காயமடைந்தாா்.