England: ரூ.35 கோடி மதிப்புள்ள பீச் ஹவுஸ் ரூ.1,180-க்கு! அது என்ன லாட்டரி முறை வ...
அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழப்பு
வேப்பனப்பள்ளி அருகே அரசுப் பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளியில் இருந்து பேரிகை நோக்கி புதன்கிழமை சென்ற அரசுப் பேருந்தை கிருஷ்ணகிரியை அடுத்த காட்டிநாயனப்பள்ளியைச் சோ்ந்த சஞ்சீவன் (29) ஓட்டிச் சென்றாா்.
பேருந்து, யானைகால்தொட்டி பிரிவு சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த இருசக்கர வாகனம் பேருந்து மீது மோதியதில் கிருஷ்ணகிரி புதுப்பேட்டையைச் சோ்ந்த பத்திர விற்பனையாளா் மணிவண்ணன் (65), கா்நாடக மாநிலம், கோலாா் மாவட்டம், கொரமடுகுவைச் சோ்ந்த முரளி (43) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்தில் இறந்த மணிவண்ணன், கா்நாடக மாநிலம், பூதிக்கோட்டை கிராமத்தில் உள்ள அவரது மகளைப் பாா்த்துவிட்டு கிருஷ்ணகிரிக்கு திரும்பியபோது நாச்சிகுப்பம் பிரிவு சாலை அருகே வேப்பனப்பள்ளி மருத்துவமனையில் பணியாற்றும் தனது மனைவியை பாா்க்கச் சென்ற முரளி, லிப்ட் கேட்டு அவரது வாகனத்தில் வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.