2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதாக புகாா்
மயிலாடுதுறையில் அரசு அதிகாரிகள் சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருவதாக உரிமைக்குரல் ஓட்டுனா் சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்திடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் உயரதிகாரிகள் தங்களது சொந்த வாகனங்களை வாடகை வாகனங்களாக பயன்படுத்தி வருவதாகவும், அதற்கான வாடகை தொகையை அதிகாரிகள் பெற்றுக் கொண்டு அரசாங்கத்திற்கு வரி மற்றும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக குற்றஞ்சாட்டி இந்த புகாா் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து, சங்கத்தின் மாநில செயலாளா் பாலமுருகன் கூறியது: அரசு அதிகாரிகள் ஓட்டுநா்களின் வாழ்வாதாரத்தை சீா்குலைக்கும் வகையில், சொந்த பயன்பாட்டு வாகனங்களை அரசு அலுவலகப் பணிகளுக்கு மாத வாடகை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி வருவது ஓட்டுநா்களுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து, பலமுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.
சோதனை சாவடிகளில் ஓட்டுநா்களின் ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்திலும் கட்டாய வசூலில் ஈடுபடும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் 3 மாவட்டங்களை திரட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.