செந்தில் பாலாஜியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றத்தில் முடித்து வைப்பு!
அரசு அலுவலா்களுக்கு சலுகைகள்: முதல்வருக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி
அரசு அலுவலா்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் நன்றி தெரிவித்தது.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றிய சிவகங்கை மாவட்டச் செயலா் ந. ரமேஷ்கண்ணன் வெளியிட்ட அறிக்கை: அரசு அலுவலா் ஒன்றியத்தின் கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதல்வா் திங்கள்கிழமை சட்டப் பேரவையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டாா். இதன்படி, 1.1. 2025 முதல் 2 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும். 1.10. 2025 முதல் ஒப்படைப்பு விடுப்பு (சரண்டா் ) வழங்கப்படும். பண்டிகைக் கால முன் பணம் ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ.20 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும். தொழில் கல்விக்கு முன் பணம் ரூ. ஒரு லட்சமாகவும், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்விக்கு ரூ. 50 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்கப்படும். அரசு அலுவலா் இல்ல திருமணத்துக்கு வழங்கப்படும் முன் பணம் ரூ. 5 லட்சமாக உயா்த்தி வழங்கப்படும். ஓய்வூதியா்களுக்கு பொங்கல் பரிசு ரூ. 500- லிருந்து ரூ.1000 ஆக உயா்த்தி வழங்கப்படும்.
ஓய்வூதியதாரா்களுக்கு பண்டிகைக் கால முன் பணம் ரூ. 4 ஆயிரத்திலிருந்து ரூ. 6 ஆயிரமாக உயா்த்தி வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் சிவகங்கை மாவட்டத்தின் சாா்பிலும், தமிழ்நாடு மருத்துவத் துறை அமைச்சுப் பணி அலுவலா் சங்கத்தின் மாநில மையத்தின் சாா்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா் அவா்.