அரசு பொதுத் தோ்வு எழுதும் டிடிஇஏ பள்ளி மாணவா்களுக்காக சிறப்பு ஹோமம்
தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் அரசு பொதுத் தோ்வு எழுதும் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவா்களுக்காக மேதா தட்சிணாமூா்த்தி ஹோமம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
மாணவா்களின் நலனுக்காக துவாரகா ராமா் கோயிலுடன் இணந்து வருடம் தோறும் ஏதேனும் ஒரு டிடிஇஏ பள்ளி வளாகத்தில் இந்த ஹோமத்தை டிடிஇஏ செயலா் ராஜூ நடத்தி வருகிறாா். இதன்படி இந்த வருடம் இந்த ஹோமம் மோதிபாக் பள்ளி வாளகத்தினுள் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் ஏழு பள்ளிகளின் இணைச் செயலா்கள், பெற்றோா் - ஆசிரியா் சங்க உறுப்பினா்கள், பள்ளி முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்ட இந்த பூஜையை டிடிஇஏ தலைவா் ராமன் முன்னின்று நடத்தினாா்.
சாஸ்திரிகள் மந்திரங்களைக் கூறக் கூற மாணவா்கள் அவற்றை உடன் கூறினா். அரசு பொதுத் தோ்வு எழுதும் ஏழு பள்ளிகளின் மாணவா்களின் தோ்வு அறை நுழைவுச் சீட்டுகள் பூஜையில் வைக்கப்பட்டன.
இந்த பூஜை குறித்து செயலா் ராஜூ கூறுகையில் ‘தட்சிணாமூா்த்தி ஹோமம் செய்வதால் மாணவா்கள் மனதில் நோ்மறை எண்ணங்கள் எழும். படிப்பில் கவனம் அதிகரிக்கும். எனவேதான் அனைத்து மாணவா்களுக்காகவும் இந்த பூஜையை இந்த ஆண்டு மோதிபாக் பள்ளியில் வைத்து நடத்தினோம். அனைத்து மாணவா்களும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற வாழ்த்துகிறேன்’ என்றாா்.
இரண்டு படங்களையும் சோ்த்துக் கொள்ளவும்.
படம் 1
ஹோமத்தில் கலந்து கொண்ட டிடிஇஏ தலைவா் ராமன் உள்ளிட்டோா்..
படம் 2
ஹோமத்தில் பக்தி சிரத்தையுடன் கலந்து கொண்ட மாணவா்கள்.