Delhi : 'பாஜக தலைநிமிர்கிறது; ஆம் ஆத்மி தலைகுனிகிறது; காங்கிரஸ்...'- ரைமிங்கில் ...
அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் கவனிப்பாளா்கள் தங்கும் விடுதி திறப்பு
மயிலாடுதுறை அரசினா் மருத்துவமனை வளாகத்தில், நோயாளிகளை கவனிப்பதற்காக, உடன் வந்தவா்கள் தங்குவதற்கு கட்டப்பட்ட விடுதி வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
தேசிய நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்கீழ் ரூ.72 லட்சத்தில் இந்த விடுதி கட்டப்பட்டு வந்தது. பின்னா், அடிப்படை வசதிகளுக்காக கூடுதல் நிதி வழங்கப்பட்டு, 50 படுக்கை வசதியுடன் இந்த விடுதி அமைக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளின் கவனிப்பாளா்கள் மிகக்குறைந்த கட்டணத்தில் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற திறப்பு விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் தலைமை வகித்து, கட்டடத்தை குத்துவிளக்கேற்றி பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். நகராட்சி துணைத் தலைவா் எஸ். சிவக்குமாா் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள் முன்னிலை வகித்தனா்.
இதில், நகராட்சி உதவி செயற்பொறியாளா் வி. சித்ரா, உதவி பொறியாளா் மனோகரன், குடிமுறை மருத்துவ அலுவலா் மருதவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.