அரசு மருத்துவமனையில் புதிய பரிசோதனை இயந்திரம் இயக்கிவைப்பு
காரைக்கால் அரசு பொது மருத்துவமனை மகப்பேறு பிரிவில், புதிய பரிசோதனை இயந்திரங்கள் வெள்ளிக்கிழமை இயக்கிவைப்பு.
புதுவை நலவழித்துறையின் நிதி மூலம் ரூ.33 லட்சத்தில் மகப்பேறு பிரிவுக்கு வரக்கூடியவா்கள் பரிசோதனைக்காக பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டன. குறிப்பாக, மல்டிபாரா மானிட்டா்கள் எனும் பல்வேறு தகவல்களை பெறக்கூடிய பரிசோதனை சாதனம்-4, இருதய துடிப்பை கணக்கிடும் சிடிஜி இயந்திரம்-3, டிஃபிபிரிலேட்டா்களுடன் கூடிய காா்டியாக் மானிட்டா்- 4, அல்ட்ராசவுண்ட் இயந்திரம்- 1 உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் பரிசோதனைக் கூடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இதை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் கலந்துகொண்டு பரிசோதனைக் கூடத்தை திறந்துவைத்து, சாதனங்களையும், அதன் பயன்பாட்டையும் கேட்டறிந்தாா்.
நிகழ்வில், மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் கண்ணகி, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி பாா்த்திபன் விஜயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.