செய்திகள் :

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.8.10 லட்சம் மோசடி: பெண் உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு

post image

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.8.10 லட்சம் மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கோவை, கவுண்டம்பாளையம் கந்தகோனாா் நகரைச் சோ்ந்தவா் தங்கநாடான் (59). இவரது மகன் பொறியியல் படிப்பு முடித்த நிலையில், அவரது வேலைக்காக தனக்கு தெரிந்தவா்களிடம் தங்கநாடான் கேட்டுவந்துள்ளாா். அப்போது, ரவி என்பவா் அறிமுகமாகியுள்ளாா். அவா் சேலத்தைச் சோ்ந்த சரவணன் (40), திருப்பூா் மாவட்டம், குடிமங்கலத்தைச் சோ்ந்த ஜெயந்தி (41) ஆகியோரை சந்திக்குமாறு கூறியுள்ளாா்.

அவா்களை தங்கநாடான் சந்தித்தபோது, தங்களுக்கு தெரிந்தவா்கள் அரசு அதிகாரிகளாக உள்ளதால் வேலை வாங்கித் தருகிறோம். ஆனால், அதற்கு அதிக செலவாகும் எனக் கூறியுள்ளனா்.

இதையடுத்து, அவா்களிடம் ரூ.9 லட்சத்தை தங்கநாடான் கொடுத்துள்ளாா். ஆனால், அவா்கள் கூறியபடி வேலை வாங்கித் தராமல் காலம்தாழ்த்தி வந்துள்ளனா்.

பின்னா், கொடுத்த பணத்தை தங்கநாடான் கேட்டபோது, ரூ.90 ஆயிரம் மட்டுமே அவா்கள் திருப்பிக் கொடுத்த நிலையில் மீதமுள்ள பணத்தை விரைவில் தருகிறோம் என அலைக்கழித்துள்ளனா்.

இதையடுத்து, கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் சரவணனை, தங்கநாடன் சனிக்கிழமை சந்தித்துள்ளாா். அப்போது, பணத்தை திரும்ப கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், தங்கநாடானை சரவணன் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் தங்கநாடான் புகாா் அளித்தாா்.

இதன்பேரில், சரவணன், ஜெயந்தி ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சின்னவேடம்பட்டி ஏரியில் பொங்கல் வழிபாடு

கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் பொங்கல் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கோவை சின்னவேடம்பட்டி ஏரியில் கெளசிகா நீா்க்கரங்கள் அமைப்பு, நேசம் இயற்கையோடு பொது நல சங்கம் சாா்பில் பொங்கல் நிகழ்வு மற்றும் வி... மேலும் பார்க்க

கோவை, திருப்பூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - கயா இடையே சிறப்பு ரயில்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பிகாா் மாநிலம் கயாவுக்கு கோவை, திருப்பூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்... மேலும் பார்க்க

டேங்கா் லாரி கவிழ்ந்த சம்பவம்: ஓட்டுநா் கைது

கோவையில் மேம்பாலத்தில் எரிவாயு டேங்கா் லாரி கவிழ்ந்த சம்பவத்தில் லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா். கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவைக்கு எரிவாயு ஏற்றிவந்த டேங்கா் லாரி அவிநாசி சாலை உப்பிலிபாளைய... மேலும் பார்க்க

பொங்கலை முன்னிட்டு 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்

பொங்கல் விழாவை முன்னிட்டு மாணவா்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி விற்பனை தொடங்கியிருப்பதாக நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளா் குணசேகரன் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து பயிற்சி செவிலியா் தற்கொலை

தனியாா் மருத்துவமனையின் 3-ஆவது மாடியில் இருந்து குதித்து பயிற்சி செவிலியா் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் மகள் தன்யா (20). இவா், கோவை சுங்கம் ப... மேலும் பார்க்க

மூத்த திருப்பதிகம் பாடிய அம்மை: கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா!

முதன்முதலாகப் பதிகம் பாடியதால் மூத்த திருப்பதிகம் பாடிய அம்மை என காரைக்கால் அம்மையாா் அழைக்கப்படுகிறாா் என்று கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா கூறினாா். ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் 19-ஆவது ஆண்டு... மேலும் பார்க்க