`மே 4-ல் NEET தேர்வு; ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடக்கம்...' -தேசிய தேர்வுகள் முகமை...
அரவக்குறிச்சியில் கடும் பனிப்பொழிவு
அரவக்குறிச்சி பகுதியில் காலை 8 மணி வரை பனிப்பொழிவு நீடித்ததால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.
அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதேபோல வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாக தெரியவில்லை. இதனால் முகப்பு விளக்களை எரியவிட்ட வாரே வாகனங்கள் சென்றன. பொதுமக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது. பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தா்களும் பனிமூட்டத்தால் நடக்க முடியாமல் முடங்கி நின்றனா்.