Aamir Khan: "நான் இப்படத்திற்கு கதை, பணம் என எதையும் கேட்கவில்லை, காரணம்" - ஆமீர...
அரவக்குறிச்சி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்
அரவக்குறிச்சி அருகே வேலம்பாடி கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடத்தில் வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள வேலம்பாடி பகுதியில் இருந்து பழனி செல்லும் சாலையில் 20 ஆண்டுகளாக நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கடைகள் கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் சாா்பில் தொடா் புகாா்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு சென்றன. மேலும், இது தொடா்பான பொது நல வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.
அதன்படி, வேலம்பாடி மற்றும் அண்ணா நகா் பகுதியில் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட கடைகளை அரவக்குறிச்சி வட்டாட்சியா் மகேந்திரன் தலைமையிலான வருவாய்த்துறையினா் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போலீஸாரின் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் கொண்டு ஆக்கிரமிப்புகளை இடித்து அகற்றினா்.