தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள்!
அரிமளம் அருகே மாடு, குதிரை வண்டி பந்தயம்
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கீரணிப்பட்டியில் மடைக்கருப்பா் கோயில் கிடா வெட்டுப் பூஜையை முன்னிட்டு, மாடு மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பந்தயத்தில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 19 ஜோடி மாடுகள், 7 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. மாட்டுவண்டி பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவாக நடத்தப்பட்டது.
முதலில் நடைபெற்ற பெரிய மாடு பிரிவில் 7 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசை பொய்யாதநல்லூா் எஸ்பிஆா், 2ஆம் பரிசை கே. புதுப்பட்டி ராமையா, 3 ஆம் பரிசை கே. புதுப்பட்டி கேஏ அம்பாள், 4ஆம் பரிசை பாலக்குடிப்பட்டி பதினெட்டாம்படி கருப்பா் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.
தொடா்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 12 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில், முதல் பரிசை கே. புதுப்பட்டி ராமையா, 2ஆம் பரிசை கே. புதுப்பட்டி மர மில், 3ஆம் பரிசை பொய்யாதநல்லூா் எஸ்பிஆா், 4ஆம் பரிசை ஈழகுடிப்பட்டி சொக்கலிங்கம் ஆகியோருக்குச் சொந்தமான மாட்டு வண்டிகள் பெற்றன.
கடைசியாக நடைபெற்ற குதிரை வண்டி பந்தயத்தில் 7 குதிரை வண்டிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை கலியநகரி மனு நீதி, 2ஆம் பரிசை குளித்தலை பில்லா, 3ஆம் பரிசை காரைக்கால் ராஜ்குமாா், 4ஆம் பரிசை மதுரை சதக் அப்துல்லா ஆகியோருக்குச் சொந்தமான குதிரை வண்டிகள் பெற்றன.
வெற்றி பெற்ற மாடு மற்றும் குதிரை வண்டிகளின் உரிமையாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பந்தயம் நடைபெற்ற கீரணிப்பட்டி - அரிமளம் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று கண்டு ரசித்தனா்.