மருந்து மிதான 100% வரி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!
அரியலூரில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி
சென்னையில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில், வியாழக்கிழமை மாலை நடைபெற்ற கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சி, அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கம், அரசு பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் என மாவட்டத்தில் 23 இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்ச்சிகளில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
அரியலூா் அரசு மருத்துவக்கல்லூரி அனிதா நினைவு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா் சா.சி. சிவசங்கா் பங்கேற்று, முதலாமாண்டு கல்லூரி மாணவா்களுக்கு தமிழ்புதல்வன் 1400 புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 803 ஏடிஎம் அட்டைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆட்சியா் பொ. ரத்தினசாமி, சட்டப்பேரவை உறுப்பினா் கு.சின்னப்பா, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. மல்லிகா, கோட்டாட்சியா் பிரேமி, நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன், அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையா் முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவா்கள் கலந்து கொண்டனா்.