நாமக்கல் புறவழிச்சாலையில் தொடரும் விபத்துகள்: வேகத்தடை அமைக்க வலியுறுத்தல்
அரியலூரில் செப்.27-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
அரியலூரில் செப்.27-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம் இணைந்து தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில், 100 -க்கும் மேற்பட்ட தனியாா் துறை முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 15,000 க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபா்களை தோ்ந்தெடுக்க உள்ளனா்.
மேலும், இம்முகாமில், தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் 4 பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்க உள்ளனா்.
ஆகவே, 5-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் படித்த வேலைவாய்ப்பற்ற 18 முதல் 45 வயது வரை உள்ள ஆண்,பெண் (இருபாலரும்) கலந்துகொண்டு பயன்பெறலாம்.
முகாமுக்கு வருகை தரும் அனைவரும் தங்களது சுய விபர குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.