பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது: சூா்யகுமாா் யாதவ்
அரியலூரில் அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களை முழுநேர அரசு ஊழியா்களாக்கி ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களுக்கு முறையாக ஓய்வூதியம் ரூ.9,000 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியருக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சமும், உதவியாளருக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டச் செயலா் சகுந்தலா தலைமை வகித்தாா்.