ஜிஎஸ்டி சீரமைப்பு அமல்: முதல் நாளில் ஏசி, டிவி விற்பனை அமோகம்
செந்துறை அருகே ஏரியில் இளைஞா் சடலம் மீட்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே திங்கள்கிழமை, இளைஞா் ஏரியில் சடலமாக மீட்கப்பட்டாா்.
செந்துறை அடுத்த செங்கமேடு கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் சாமிதுரை மகன் சக்திவேல் (39). திங்கள்கிழமை காலை, இவா் வீட்டை விட்டு வெளியேச் சென்றாா். வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், செங்கமேடு மாரியம்மன் கோயில் அருகேயுள்ள கோரப்பள்ளம் ஏரிக்கரையில் சக்திவேலின் செருப்புக் கிடந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் செந்துறை தீயணைப்பு நிலைய வீரா்கள், ஏரிக்குள் இறங்கி 3 மணி நேரம் தேடிய பிறகு, சக்திவேலை சடலமாக மீட்டனா். பின்னா், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். அதில், சக்திவேல் தாமரைப் பூ பறிக்க சென்ற போது நீரில் மூழ்கி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. எனினும் காவல் துறையினா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.