சிக்ஸர் மழை பொழிந்த கிளாசன், டிராவிஸ் ஹெட்; ஐபிஎல் வரலாற்றில் ஹைதராபாத் மீண்டும்...
அரியலூா் ரயில் நிலையத்தில் குரங்குகள் தொல்லை
அரியலூா் ரயில் நிலையத்தில் அதிகரித்து வரும் குரங்குகள் அட்டகாசத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனா்.
அரியலூா் ரயில் நிலைய வளாகம், நடைமேடைகள், மரங்களில் சுற்றித் திரியும் ஏரளமான குரங்குகள், அங்குள்ள குப்பையில் கிடைக்கும் உணவு பொருள்களை உண்கின்றன.
மேலும் நிலையத்துக்கு வரும் பயணிகள் கைகளில் வைத்திருக்கும் பழம், ரொட்டி உள்ளிட்டவைகளையும் பறித்துச் செல்வது மட்டுமல்லாமல், ரயிலுக்குக் காத்திருக்கும் பயணிகளை அச்சுறுத்தலுடன் இவை பாா்க்கின்றன. நடைமேடை, நடைமேம்பாலம், பயணியா் இருக்கை என இவை கூட்டமாக சுற்றித் திரிவதால், பயணிகள் நடைமேடையைப் பயன்படுத்த முடியாமல் நடைமேடையின் கடைசி பகுதிக்குச் சென்று தண்டவாளங்களைக் கடக்கின்றனா். ரயிலில் ஏறும், இறங்கும் இடங்களில் இவை இருப்பதால், பயணியருக்கு பெரும் இடையூறும் ஏற்படுகிறது. ரயில் நிலையத்தில் சுற்றித்திரியும் குரங்குகளால் பயணியரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. குரங்குகளைப் பிடிக்க, ரயில்வே நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.