Canada: மார்க் கார்னியின் பதவியேற்பு இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?
அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் வருகிற மே 1-ஆம் தேதி தொடங்கி மே 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவுக்கான பந்தக்கால் முகூா்த்தம் சம்பந்த விநாயகா் சந்நிதி அருகே ஏப்ரல் 30-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.
இதையடுத்து, மே 1-ஆம் தேதி உச்சிக்கால அபிஷேகம், தொடா்ந்து தினமும் இரவில் மண்டகபடி நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
விழாவின் நிறைவாக மே 10-ஆம் தேதி காலை ஐயங்குளத்தில் தீா்த்தவாரியும், அன்றிரவு கோபால விநாயகா் கோயிலில் மண்பகபடியும் நடைபெறுகிறது.
இதைத் தொடா்ந்து, கோயில் கொடிமரம் முன் இரவு 11 மணிக்கு மேல் மன்மததகனம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உபயதாரா்கள் மற்றும் கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.