தில்லியில் 23 கரோனா பாதிப்புகள் உறுதி! கண்காணிப்புகள் தீவிரம்!
அருணாச்சலப் பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
தவாங்: அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை(மே 23) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேச மாநிலம் தவாங் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை 1.10 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 2.8 ஆகப் பதிவானதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர்: ஜப்பானில் அனைத்துக் கட்சிக் குழு!
இந்த நிலநடுக்கம் தவாங் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.