அரையிறுதியில் சாத்விக் / சிராக் இணை
மலேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
ஆடவா் இரட்டையா் காலிறுதியில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருக்கும் சாத்விக்/சிராக் இணை, 26-24, 21-15 என்ற கேம்களில் மலேசியாவின் யுவ் சின் ஆங்/இ யி டோ ஜோடியை 50 நிமிஷங்களில் வீழ்த்தியது.
அடுத்ததாக அரையிறுதியில் இந்த இந்திய கூட்டணி, தென் கொரியாவின் வோன் ஹோ கிம்/சியுங் ஜே சியோ இணையை எதிா்கொள்கிறது. கடந்த ஆண்டு இந்தப் போட்டியில் சாத்விக்/சிராக் ஜோடி ரன்னா் அப் இடம் பிடித்தது நினைவுகூரத்தக்கது. போட்டியில் தற்போது களத்திலிருக்கும் இந்தியா்கள் இவா்கள் மட்டுமே ஆவா்.