வாக்கு திருட்டைக் கண்டித்து செப். 6, 13-ல் தொடா் முழக்கப் போராட்டம்
``அர்ஜுன் தாஸை ஒரு வளையத்தில் அடைத்து வைக்க பலர் நினைத்தனர், ஆனால்.!" - நடிகர் மணிகண்டன்
விஷால் வெங்கட் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ், காளி வெங்கட், நாசர், அபிராமி, உள்ளிட்ட சிலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'Bomb'.
இந்தப் படம் வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மணிகண்டன், " இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான்.
அனைவரும் பிரமாதமாக செய்திருக்கிறார்கள். நான் பார்த்து வியக்க கூடியவர் காளி வெங்கட்.
நீண்ட காலத்துக்கு பின், இந்த படத்தில் புஷ்பவனம் குப்புசாமி பாடி இருக்கிறார். அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
அர்ஜுன் தாஸ் கதாபாத்திரத்திற்கு தெலுங்கு டப் செய்வதற்கு நான் முயற்சி செய்தேன், ஆனால் என்னால் முடியாமல் போனது.
அர்ஜுன் தாஸை ஒரு குறிப்பிட்ட வளையத்தில் அடைத்து வைக்க பலர் நினைத்தனர்.
ஆனால், தன்னுடைய முயற்சியால் அதை அவர் மாற்றி இருக்கிறார்.

அதேபோல படத்தின் இயக்குநர் விஷால் வெங்கட் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார் என்பதை நான் அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.
அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். அவரைப் பார்த்து நான் நிறைய வியந்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...