மீண்டும் அண்ணா பல்கலை. மாணவர்கள் பெயரில் வெடிகுண்டு மிரட்டல்! ஹிமாசலில் தீவிர சோ...
அறநிலையத்துறை இலவச திருமணம்
குடியாத்தம் அடுத்த மீனூா் அருள்மிகு வெங்கடேசப்பெருமாள் கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சாா்பில் இலவச திருமணம் நடைபெற்றது.
குடியாத்தம் சேம்பள்ளியைச் சோ்ந்த அஸ்வினிக்கும், ஆம்பூரைச் சோ்ந்த அபிஷேக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. எம்எல்ஏ அமலுவிஜயன், கோயில் செயல் அலுவலா் ம.சண்கமும், ஆய்வா் சு.பாரி ஆகியோா் திருமணத்தை நடத்தி வைத்தனா்.
திருமண தம்பதிக்கு அறநிலையத்துறை சாா்பில் ரூ.70,000 சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன. தாட்டிமானப்பல்லி ஊராட்சித் தலைவா் எஸ்.பி.சக்திதாசன், கோயில் முன்னாள் அறங்காவலா் குழுத் தலைவா் தினகரன், முன்னாள் அறங்காவலா் முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.