செய்திகள் :

அறிமுகமான 3 அணிகளுக்கும் வெற்றியைப் பெற்றுத் தந்த ஸ்ரேயாஸ் ஐயர்!

post image

அறிமுகமான மூன்று அணிகளுக்கும் முதல் போட்டியிலேயே வெற்றியைப் பெற்றுத் தந்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.

பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதிய ஐபிஎல் தொடரின் 5-வது லீக் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பஞ்சாப் அணி 243 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் 97* ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷஷாங் சிங்கின் அதிரடியால் அவரால் சதத்தை எட்ட முடியவில்லை.

இந்த நிலையில், பஞ்சாப் கேப்டனான ஸ்ரேயாஸ் புதிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆகியிருக்கிறார். அந்த வகையில் மூன்று அணிகளை வழிநடத்திய 5-வது கேப்டன் என்ற சாதனையையும், 2-வது இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

முதல் முறையாக தில்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், முதல் போட்டியிலேயே கொல்கத்தா அணியை வீழ்த்தியிருந்தார். அதன்பின்னர் 2022 ஆம் ஆண்டில் கொல்கத்தா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் சென்னை அணியை வீழ்த்தினார். அதன்பின்னர் இந்தாண்டு பஞ்சாப் அணி சார்பில் குஜராத் அணியை வீழ்த்தியுள்ளார்.

இதன்மூலம், அறிமுகமான முதல் போட்டியிலேயே மூன்று வெவ்வேறு அணிகளுக்கு மூன்று போட்டிகளில் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த முதல் கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி வெவ்வேறு அணிகளுக்கு அரைசதம் விளாசிய முதல் கேப்டன் என்ற சாதனையையும் படைத்துள்ளார் ஸ்ரேயாஸ் ஐயர்.

அவருக்கு முன்னதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் புணே, ராஜஸ்தான் அணிகளுக்காக முதல் போட்டியில் வெற்றிபெற்றிருந்தாலும், புணே வாரியர்ஸ் அணிக்காக போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்!

மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!

அறிமுகப் போட்டி என்பதால் மதிய உணவு உண்ணாமலே விளையாடியதாக ஆட்ட நாயகன் விருது வென்ற இளம் மும்பை வீரர் அஸ்வனி குமார் பேசியுள்ளார்.ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயி... மேலும் பார்க்க

மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!

ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 117 என்ற இலக்கினை 12.5 ஓவர்களில் வென்று அசத்தியது. இந்தப் போட்டியில் மும்பை சார்பாக அறிமுகமான அஸ்வினி குமார் 4 விக்கெ... மேலும் பார்க்க

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது. முதலில் கொல்கத்தா 16.2 ஓவா்களில் 116 ரன்களுக்... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்திய... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?

அறிமுகப் போட்டியின் முதல் பந்திலேயே ரஹானே உள்பட 3 விக்கெட்டைத் தூக்கிய மும்பை வீரர் அஸ்வனி குமார், அணியில் நிரந்தரமாக ஜொலிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12... மேலும் பார்க்க

மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சு: கொல்கத்தா அணியில் சுனில் நரைன்!

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை அணி முதலில் பந்துவீசுவதாகத் தெரிவித்துள்ளது.18-வது ஐபிஎல் தொடரின் லீக் சுற்றின் 12 வது போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் ப... மேலும் பார்க்க