அனல் பறக்கும் கலைப்படைப்பு... பைசன் படத்தைப் புகழ்ந்த தயாரிப்பாளர்!
அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?
நடிகர் அஹான் பாண்டா நடித்த சய்யாரா திரைப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியை அடைந்துள்ளது.
நடிகை அனன்யா பாண்டேவின் சகோதரான அஹான் பாண்டே சய்யாரா படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை மோஹித் சுரி இயக்கியிருந்தார்.
ராப் இசைப் பாடகரான கிரிஷ் கபூர் (அஹான்) பிரபலமாக ஆசைப்படுகிறார். நல்ல திறமைசாளியான இவர் வாணி பத்ராவைக் (அனீத் பட்) காதலிக்கிறார்.
ஒருகட்டத்தில் காதலி ஒரு தீரா சிக்கலில் மாட்டிக்கொள்கிறார். அதன்பின், இருவரின் காதல் என்ன ஆனது என்கிற கதையாக உருவான இப்படம் உணர்வுப்பூர்வமாக இருந்ததால் ரசிகர்களிடம் மிகச்சிறப்பான வரவேற்பைப் பெற்று மறுமுறையும் பார்க்கப்பட்டு வருகிறது.
இதனால், ரூ. 50 கோடி செலவில் உருவான இப்படம் இதுவரை ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அறிமுக நாயகர்களின் படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படம் இதுதான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.
இதையும் படிக்க: மணிரத்னம் படத்தில் நாயகனாகும் துருவ் விக்ரம்!