செய்திகள் :

அற்புதம்! டிஎன்ஏ படத்தைப் பாராட்டிய சுதா கொங்காரா!

post image

அதர்வா நடித்த டிஎன்ஏ படத்தை இயக்குநர் சுதா கொங்காரா பாராட்டியுள்ளார்.

இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து எமோஷனல் த்ரில்லராக உருவான இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

குறிப்பாக, அதர்வா மற்றும் நிமிஷாவின் நடிப்பும் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் நன்றாக இருந்ததாக விமர்சனங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

மேலும், படத்தின் கதையும் திரைக்கதையும் பேசப்பட வேண்டிய விஷயத்தை பரபரப்பாக பேசியதால் அதர்வாவுக்கும் நல்ல படமாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், டிஎன்ஏ படத்தைப் பார்த்த இயக்குநர் சுதா கொங்காரா, “ஒரு அருமையான படத்தைப் பார்த்தேன். எப்போதும்போல் நெல்சன் வெங்கடேஷன் அற்புதமாக எழுதியிருக்கிறார். நடிகர்கள் அதர்வா, நிமிஷா, சேத்தன், பாலாஜி சக்திவேல் மற்றும் அந்த பாட்டியின் நடிப்பும் சிறப்பாக இருந்தது. ரசிகர்களுடன் சந்தோஷமாக படத்தைப் பார்த்தேன். அருமை” எனப் பாராட்டியுள்ளார்.

இதையும் படிக்க: கூலி - ஹிந்தியில் வேறு பெயர்! ஏன்?

யுவன் குரலில் பறந்து போ படத்தின் புதிய பாடல்!

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான பறந்து போ திரைப்படத்தின் 3-ஆவது பாடல் வெளியாகியுள்ளது. தரமணி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராம் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலியை வைத்து ‘ஏழுகடல் ஏழுமலை’ திரை... மேலும் பார்க்க

3 பிஎச்கே டிரைலர், இசை வெளியீட்டுத் தேதி!

நடிகர் சித்தார்த் நடித்துள்ள '3 பிஎச்கே' படத்தின் டிரைலர், இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் ... மேலும் பார்க்க

ஸ்ரீகாந்த் - சில வெற்றிகளும் சர்ச்சைகளும்..!

சினிமாவில் முதல் படத்திலேயே ஒருவர் கவனிக்கப்பட வேண்டுமென்றால் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லது தன் நடிப்புத் திறனையும் வசனங்களையும் ஒரு துள்ளலுடன் முன்வைத்து ரசிகர்களைக்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் நடிகர் ஆமிர் கான் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சந்தித்து பேசியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குநருமான ஆமிர் கானின் புதிய திரைப்படமான, ”சித்தாரே ஜமீன் பர்” திரையரங்குகளில் வ... மேலும் பார்க்க

நீண்ட இடைவேளைக்குப் பிறகு... சின்ன திரையில் மீண்டும் நிஷா!

நடிகை நிஷா கிருஷ்ணன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்ன திரையில் மீண்டும் நடிக்கவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் இவர் சிறப... மேலும் பார்க்க

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் பெயர்!

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர... மேலும் பார்க்க