செய்திகள் :

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் பெயர்!

post image

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர்.

இறுதியாக, மம்மூட்டி நடித்த பசூக்கா அவருக்கு வெற்றியைக் கொடுத்தது. அதேபோல், மோகன்லாலுக்கு துடரும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, ஹருதயப்பூர்வம் படத்திற்காகக் காத்திருக்கிறார்.

தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களின் இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். இதில் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன் தாரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, முதல்கட்ட படப்பிடிப்பு இலங்கையில் முடிந்திருந்தது.

இந்த நிலையில், இலங்கையில் நேர்காணல் ஒன்றில் பேசிய மோகன்லால், ”நானும் மம்மூட்டியும் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கையில் இருக்கிறோம். மிகப்பெரிய படமாக இது உருவாகி வருகிறது. காரணம், ஃபஹத் ஃபாசில், குஞ்சக்கோ போபன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களும் இதில் இணைந்துள்ளனர். படத்திற்கு பேட்ரியாட் (patriot - தேசபக்தன்) எனப் பெயரிட்டுள்ளோம்” என்றதுடன் “இலங்கை சினிமா இயக்குநர்கள் என்னை நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடித்துக்கொடுப்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

மம்மூட்டியும் மோகன்லாலும் மலையாள சினிமாவில் வசூல் நட்சத்திரங்களாக இருக்கும் சூழலில் இப்படம் வணிக ரீதியாக பெரிய சாதனைகளைச் செய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

யுவன் குரலில் பறந்து போ படத்தின் புதிய பாடல்!

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவான பறந்து போ திரைப்படத்தின் 3-ஆவது பாடல் வெளியாகியுள்ளது. தரமணி திரைப்படத்திற்குப் பின் இயக்குநர் ராம் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, அஞ்சலியை வைத்து ‘ஏழுகடல் ஏழுமலை’ திரை... மேலும் பார்க்க

3 பிஎச்கே டிரைலர், இசை வெளியீட்டுத் தேதி!

நடிகர் சித்தார்த் நடித்துள்ள '3 பிஎச்கே' படத்தின் டிரைலர், இசை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.சித்தா படத்தின் வெற்றிக்குப் பின், கமலுடன் இந்தியன் - 2, மிஸ் யூ ஆகிய படங்களில் நடிகர் சித்தார்த் ... மேலும் பார்க்க

ஸ்ரீகாந்த் - சில வெற்றிகளும் சர்ச்சைகளும்..!

சினிமாவில் முதல் படத்திலேயே ஒருவர் கவனிக்கப்பட வேண்டுமென்றால் சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும் அல்லது தன் நடிப்புத் திறனையும் வசனங்களையும் ஒரு துள்ளலுடன் முன்வைத்து ரசிகர்களைக்... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவருடன் நடிகர் ஆமிர் கான் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை, பிரபல பாலிவுட் நடிகர் ஆமிர் கான் சந்தித்து பேசியுள்ளார். பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குநருமான ஆமிர் கானின் புதிய திரைப்படமான, ”சித்தாரே ஜமீன் பர்” திரையரங்குகளில் வ... மேலும் பார்க்க

நீண்ட இடைவேளைக்குப் பிறகு... சின்ன திரையில் மீண்டும் நிஷா!

நடிகை நிஷா கிருஷ்ணன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சின்ன திரையில் மீண்டும் நடிக்கவுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் ஒளிபரப்பாகிவரும் மெளனம் பேசியதே தொடரில் இவர் சிறப... மேலும் பார்க்க

ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிஎஸ்ஜியுடன் மோதும் இன்டர் மியாமி!

கிளப் உலகக் கோப்பையில் இன்டர் மியாமி அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றது. ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் பிஎஸ்ஜி அணியுடன் மோதவிருக்கிறது. கிளப் உலகக் கோப்பையின் லீக் போட்டியில் மெஸ்ஸியின் இன்டர் மியாமி அணியும்... மேலும் பார்க்க