கடலூரில் பூச்சிக்கொல்லி மருந்து ஆலையில் விபத்து: ரசாயனக் கசிவால் பாதிக்கப்பட்...
அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை சமன்செய்த ஜோ ரூட்!
ஒருநாள் போட்டிகளில் அலெக்ஸ் ஹேல்சின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி லார்ட்ஸில் நேற்று (செப்டம்பர் 4) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்தார். அவர் 72 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் அரைசதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து அணிக்காக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்துள்ள அலெக்ஸ் ஹேல்ஸின் சாதனையை ஜோ ரூட் சமன் செய்தார். இருவரும் ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 6 அரைசதங்கள் அடித்துள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக அரைசதங்கள் அடித்த இங்கிலாந்து வீரர்கள்
அலெக்ஸ் ஹேல்ஸ் - 6 அரைசதங்கள்
ஜோ ரூட் - 6 அரைசதங்கள்
கிரீம் ஹிக் - 5 அரைசதங்கள்
நிக் நைட் - 5 அரைசதங்கள்
கெவின் பீட்டர்சன் - 5 அரைசதங்கள்
ஜோனதன் டிராட் - 5 அரைசதங்கள்
England's Joe Root has equalled Alex Hales record in ODIs.
இதையும் படிக்க: களமிறங்கிய 5 போட்டிகளிலும் அரைசதம்! கலக்கும் தென்னாப்பிரிக்க வீரர்!