செயற்கை இனிப்பு கொண்ட பானங்களை குடிப்பதால் மூளைக்கு வயதாகிறதா? - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பானங்களை உட்கொள்வது மூளையின் நினைவாற்றல் திறனை பாதிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எல்லாவற்றுக்கும் செயற்கையான பொருள்கள் சந்தையில் கிடைக்கின்றன. அப்படி சந்தையில் கிடைக்கும் செயற்கை இனிப்பூட்டிகள் கொண்ட பொருள்களை உட்கொள்வதால் நினைவாற்றல் மற்றும் வார்த்தைகளை நினைவு கூறும் திறன்கள் பாதிக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக நியூராலஜி இதழில் வெளியாகியுள்ளது.

குறைந்த கலோரி சர்க்கரை ஒரு மாற்று வழியாக தற்போது பிரபலம் அடைந்தாலும், வழக்கமாக இதனை பயன்படுத்தும் போது ஆரோக்கியக் கேடுகள் விளைவிப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஆய்வின்படி அதிக அளவில் இதுபோன்று செயற்கையான இனிப்பூட்டிகள் உட்கொள்பவர்களில் 62 சதவிகிதம் பேருக்கு வேகமாக நினைவாற்றல் திறன் குறைவதாகவும், இது மூளையின் வயதை 1.6 ஆண்டுகள் அதிகரிப்பதற்கு சமம் என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
பிரேசிலில் சுமார் 13,000 பேர் கொண்ட குழுவிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் அந்த தகவல் வெளியாகியுள்ளது. டயட் சோடா தவிர செயற்கை இனிப்பு கொண்டு தயாரிக்கப்படும் பானங்கள் இது போன்ற பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு குறிக்கிறது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!