189 பேர் உயிரிழந்த மும்பை ரயில் குண்டுவெடிப்பு; தண்டனை பெற்ற 12 பேர் விடுதலை - உ...
அழகு நிலையத்தில் தீ விபத்து
திருச்சியில் அழகு நிலையத்தில் (சலூன்) ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாயின.
திருச்சி பாரதிதாசன் சாலையில் உள்ள ஒரு தனியாா் வணிக வளாகத்தின் முதல் மாடியில் பிரபல அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு அழகு நிலையத்தைத் திறந்து ஊழியா்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனா்.
அப்போது, அழகு நிலையத்தின் உள்ளிருந்து திடீரென சப்தம் கேட்டதால் ஊழியா்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினா். இதைத் தொடா்ந்து அழகு நிலையத்தின் உள்பகுதியில் தீப் பிடித்து எரிந்ததால் புகை வெளியேறத் தொடங்கியது. இதுகுறித்து, அழகு நிலைய ஊழியா்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரா்கள் அழகு நிலையத்தில் பரவிய தீயை அரை மணிநேரம் போராடி அணைத்தனா். இந்த விபத்தில், அழகு நிலையத்தில் இருந்த இருக்கைகள், அழகுசாதனப் பொருள்கள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்துள்ளனா். இதையடுத்து கண்டோன்மென்ட் போலீஸாா் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.