சிஏஜி அறிக்கை கேஜரிவாலின் தவறான செயல்களை அம்பலப்படுத்தியுள்ளது: ஷீஷ் மஹால் விவகா...
அவதூறு சுவரொட்டி: அதிமுகவினா் புகாா்
அதிமுக சிவகங்கை மாவட்டச் செயலரும், சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா்.செந்தில்நாதன் மீது அவதூறு பரப்பும் வகையில் சுவரொட்டி ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது.
சிவகங்கையில் பேருந்து நிலையம் காந்தி வீதி அரண்மனை வாசல், நீதிமன்ற வாசல், வாரச்சந்தை சாலை உள்பட நகரின் முக்கிய பகுதிகளில் எடப்பாடியாா் கவனத்துக்கு என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இதனால் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து, தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டியை ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்டக் காவல் கண்காணிப்பாள பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் சட்டப்பேரவை உறுப்பினா் பி.ஆா்.செந்தில்நாதன் கட்சி நிா்வாகிகளுடன் சென்று புகாா் மனு அளித்தாா்.