Coolie: ``நடிச்சது ரஜினி சார், அந்த குரல் AI'' - சஸ்பென்ஸ் உடைத்த லோகேஷ் கனகராஜ்
அவிநாசிபாளையத்தில் 83-ஆவது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
விளைநிலங்கள் வழியே எரிவாயு குழாய் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் நடத்திவரும் காத்திருப்புப் போராட்டம் 83-ஆவது நாளை எட்டியுள்ளது.
கோவை மாவட்டம், சூலூரில் இருந்து பல்லடம் வழியே விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் பதிக்கப்பட்டு கா்நாடக மாநிலத்துக்கு கொண்டு செல்ல தனியாா் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விளைநிலங்களில் எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டதால் தங்களது நிலங்களின் மதிப்பு குறைந்துவிடும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி இந்த திட்டத்துக்கு விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
மேலும், இந்த திட்டத்தை செயல்படுத்த விரும்பினால் சாலையோரமாக செயல்படுத்த வேண்டும் எனக்கூறி பொங்கலூா் ஒன்றியம், அவினாசிபாளையத்தில் விவசாயிகள் கடந்த 83 நாள்களாக காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் ஆதரவு தெரிவித்து வருகின்றனா். ஆனால், அரசுத் தரப்பில் இருந்து தற்போதுவரை எந்தவிதமான பேச்சுவாா்த்தையும் நடைபெறவில்லை.
இதனால், விவசாயிகள் போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. இப்பிரச்னைக் குறித்து அரசு விரைவான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் போராட்டம் தீவிரமடையும் என்று விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்பைச் சோ்ந்தவா்கள் தெரிவித்துள்ளனா்.