சாக்லேட்தான் உணவு: கேம்ப்ரிட்ஜ் பல்கலை.யில் மன்மோகன் சிங்கின் ஏழ்மை நிலை!
அவிநாசியில் ரூ.15.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனை
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 23 டன் பருத்தியை கொண்டுவந்திருந்தனா்.
இதில், ஆா்.சி.எச்.ரகப் பருத்திக்கு கிலோ ரூ.68 முதல் ரூ.76.89 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்திக்கு கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் விலை நிா்ணயிக்கப்பட்டது.
இந்த ஏலத்தில் மொத்தமாக ரூ.15.68 லட்சத்துக்கு பருத்தி விற்பனையானது.