அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
அவிநாசியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிப்பு
அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலைச் சுற்றியுள்ள பகுதியில் சனிக்கிழமை 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் திருப்பூா் வடக்கு, கோயில் நிா்வாகம், அவிநாசி பேருராட்சி நிா்வாகம், கேபிஆா் குழுமம், பசுமை தோழன் திருப்பூா், அவிநாசி கலை, அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ் மாணவா்கள் ஆகியோா் இணைந்து, அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சுற்றுப்பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனா். இதில் கோயிலை சுற்றியுள்ள பகுதியில் 250 கிலோ நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, பேரூராட்சி நிா்வாகத்திடம் அளிக்கப்பட்டது.