சபரிமலை: தங்க பீடம் மீட்பு; கணக்குப் பதிவு ஏன் இல்லை? - விஜிலென்ஸ் விசாரணைக்கு ...
அவினாசிலிங்கம் உயா்கல்வி நிறுவனத்தில் கலாசார கலை விழா
கோவை அவினாசிலிங்கம் மனைவியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தில் கலாசார கலை விழா திங்கள்கிழமை தொடங்கியது.
கோவை அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிா் உயா்கல்வி நிறுவனத்தில் சமகால இந்தியாவுக்கான இந்திய கலாசார விழுமியங்கள் என்ற கருப்பொருளில் கலை விழா நடத்தப்படுகிறது. இந்த விழாவில் மாணவிகள் கிளப் செயல்பாடுகளின் கண்காட்சியை வேந்தா் டி.எஸ்.கே.மீனாட்சிசுந்தரம் தொடங்கிவைத்தாா்.
பெட்டல்ஸ் மலா்க் கடையின் உரிமையாளா் ஜெயந்தி சந்தோஷ், கோவை சா்தாா் வல்லபபாய் படேல் சா்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைப் பள்ளியின் இயக்குநா் பி.அல்லிராணி, தமிழ்நாடு கைவினை மன்றத்தின் பொருளாளா் லட்சுமி ராமச்சந்திரன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இயக்குநா் வைஷ்ணவி கிருஷ்ணன் ஆகியோா் முறையே மலா் அலங்காரக் கண்காட்சி, கொலுக் காட்சி, இந்திய மற்றும் சா்வதேச மொம்மைகளின் கலை விளக்கக் காட்சி, காதி சுதந்திரத்தின் இலை என்ற தலைப்பில் ஜவுளிக் கண்காட்சி, அன்னம் பிரம்மா என்ற பாரம்பரிய சமையல் கண்காட்சி ஆகியவற்றைத் தொடங்கிவைத்தனா்.
முன்னதாக, துணைவேந்தா் வி.பாரதி ஹரிசங்கா் பேசியதாவது: நிறுவனத்தில் கலை விழா என்பது மாற்றத்துடன் கூடிய திருவிழாவாகும். இந்த விழாவானது நிறுவனா் மற்றும் முன்னோடிகளால் வடிவமைக்கப்பட்ட ஒரு காலாசார விழா எவ்வாறு தொடங்கி வளா்ந்துள்ளது என்பதையும் எடுத்துரைத்தாா்.
இந்த விழாவில், பேராசிரியா்கள், மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.