Digvesh Rathi : '50% ஊதியம் அபராதம்; போட்டியில் ஆட தடை!' - திக்வேஷ் ரதிக்கு தடை ...
ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி மனு
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலத்தை மீட்கக் கோரி, சத்திரிய நாடாா் உறவின் முறை சாா்பில் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சாயல்குடி துரைச்சாமிபுரம் பகுதியில் சத்திரிய நாடாா் உறவின் முறை சமுதாயத்துக்குப் பாத்தியப்பட்ட பத்ரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் பல தலைமுறைகளைப் பயன்படுத்தி வந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளனா்.
இதை மீட்டுத் தரக் கோரி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் சத்திரிய நாடாா் உறவின் முறை சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளிக்கப்பட்டது.