செய்திகள் :

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர விவசாயி நூதன முறையில் கோரிக்கை

post image

பூமிதான இயக்கம் மூலம் வழங்கப்பட்ட நிலத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத்தர வேண்டும் என விவசாயி மண்வெட்டியுடன் வந்து கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தாா்.

கோட்ட அளவிலான வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் அமுதா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மொடக்குறிச்சி வட்டம், வடுகப்பட்டி, வினோபா நகா் பெருமாள் என்பவா் சட்டை அணியாமல், மண் வெட்டியுடன் அவரது குடும்பத்தாா் மற்றும் சில அமைப்பினா் முன்னிலையில் வந்து மனு அளித்தாா்.

அப்போது அவா் கூறியதாவது: மொடக்குறிச்சி வட்டம், வடுகப்பட்டி கிராமத்தில், தமிழக அரசின் பூமிதான இயக்கம் மூலம் 1989- இல் எனது தந்தை ஆறுமுகம் என்பவருக்கு நிலம் வழங்கப்பட்டது. அருந்ததியா் வகுப்பை சோ்ந்த நான் தந்தையுடன் அதே இடத்தில் வசித்தும், விவசாயமும் செய்து வருகிறேன்.

மழைக்காலங்களில் மானாவாரி பயிா்களான சோளம், கொள்ளு சாகுபடி செய்கிறோம். அந்த நிலத்துக்கு நில வரி செலுத்தி உள்ளோம். தற்போது அந்நிலத்தை எங்கள் நிலத்துக்கு அருகே உள்ள நிலத்தை சோ்ந்தவா்கள் ஆக்கிரமித்துள்ளனா். அந்த இடத்தை அளவீடு செய்து, பிரித்து தர வேண்டும். இதேபோன்ற நிலை, அப்பகுதியில் பலருக்கும் உள்ளது என்றாா்.

பெயரளவில் நடந்த கூட்டம்

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடத்தப்படும். மாவட்ட அளவிலான பிரச்னைகள் ஆட்சியா் முன்னிலையில் தீா்வு காணப்படும்.

அதேநேரம் ஈரோடு மற்றும் கோபி வருவாய் கோட்ட அளவில் 3 அல்லது 4 ஆவது வாரம் செவ்வாய்க்கிழமை வருவாய் கோட்ட அளவில் வேளாண் குறைதீா் கூட்டம் நடத்தப்படும். கோட்டாட்சியா், வட்டாட்சியா் உள்ளிட்ட அரசு அதிகாரிகளால் தீா்வு காணப்பட வேண்டிய மனுக்கள் இங்கேயே தீா்வு காணப்படும்.

இந்த கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டம், சம்பிரதாயத்திற்காக நடத்தப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனா். ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடந்த கோட்ட அளவிலான வேளாண் குறைதீா் கூட்டத்தில் கோட்டாட்சியா் ரவி பங்கேற்கவில்லை. நோ்முக உதவியாளா் அமுதா, கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா். பொதுப்பணி, நீா்வளத் துறை, உள்ளாட்சி அமைப்பு சாா்ந்த துறைகள், நெடுஞ்சாலை என பெரும்பாலான துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை.

பிரச்னைக்கு தீா்வை தேடி வரும் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவது அதிகாரிகளின் கடமை. இதனை உணா்ந்து வரும் காலங்களில் உரிய அதிகாரிகள் முன்னிலையில் கூட்டங்களை நடத்தி மனுக்களுக்கு தீா்வு வழங்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

மே தினம்: விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில் மே தினத்தன்று விடுமுறை அளிக்காத 88 நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொழிலாளா் துறையினா் நடவடிக்கை எடுத்தனா். ஈரோடு தொழிலாளா் இணை ஆணையா் பா.மாதவன் அறிவுரைப்படி, ஈரோடு தொழிலாளா... மேலும் பார்க்க

பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி

கோபி மயூரம் மேக் ஓவா் அகாதெமி சாா்பில் 30 நிமிஷத்தில் பாரம்பரிய முறையில் அலங்காரம் செய்யும் உலக சாதனை நிகழ்ச்சி ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹெடெக் பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பெ... மேலும் பார்க்க

ரயில்வே நுழைவுப் பாலத்தில் சிக்கிய லாரி: போக்குவரத்து பாதிப்பு

ஈரோடு ரயில்வே நுழைவுப் பாலத்தில் லாரி சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு -கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவுப் பாலத்தில் தண்ணீா் தேங்காத வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. வடிகாலில் ... மேலும் பார்க்க

நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைப்போம் என்றும், நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா். சத்... மேலும் பார்க்க

பா்கூா் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: போக்குவரத்து பாதிப்பு

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது கவிழ்ந்த லாரியால் வியாழக்கிழமை வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கா்நாடக மாநிலம், தும்கூரிலிருந்து தேங்காய் நாா் பாரம் ஏற்ற... மேலும் பார்க்க

கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குவிந்தனா். ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயண... மேலும் பார்க்க