அம்பேத்கர், தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணை வேந்தர்களை தேர்ந்தெடுக்க தேடுதல் குழு!
கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வியாழக்கிழமை குவிந்தனா்.
ஈரோடு மாவட்டம், கோபியை அடுத்துள்ள கொடிவேரி அணைக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்நிலையில், மே 1 விடுமுறை தினம் என்பதால் கொடிவேரி அணையில் வியாழக்கிழமை காலை முதலே மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
ஈரோடு, நாமக்கல், சேலம், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக வந்த மக்கள், நீரில் குளித்து மகிழ்ந்தனா். மேலும், பரிசலில் பயணம் செய்து குடும்பத்துடன் பொழுதை கழித்தனா்.
சுற்றுலாப் பயணிகளின் வருகையால் கடைகளில் வியாபாரம் களைக்கட்டியது.
பாதுகாப்புப் பணியில் பங்களாபுதூா், கடத்தூா் போலீசாா் ஈடுபட்டிருந்தனா்.