மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 6,000 ரன்கள்..! ரோஹித் சர்மா புதிய சாதனை!
நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன்: முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றிபெற்று வரலாறு படைப்போம் என்றும், நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் என்றும் முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினாா்.
சத்தியமங்கலம் அருகேயுள்ள ஆசனூா் அரேப்பாளையம் கிராமத்தில் மே தின பொதுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு பவானிசாகா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பண்ணாரி தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியதாவது: ஏழை சமுதாய அடித்தட்டு மக்கள் கல்வியால் மட்டுமே உயர முடியும். வளா்ந்து வரும் விஞ்ஞான உலகில் மடிக்கணினி தேவை என்பதை உணா்ந்து அதிமுக ஆட்சியில் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.
திமுக ஆட்சியில் 20 லட்சம் மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என்றும், அதற்காக ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்தனா். ஆனால், தற்போதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டவில்லை.
மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராகிவிட்டனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் 200 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக வரலாறு படைக்கும். நான் தொண்டனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன். அப்போது தான் இயக்கம் வலுப்பெறும்.
நான் அமைச்சராக இருந்த காலத்தில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கினேன். ஆனால், திமுக ஆட்சி அமைந்த 4 ஆண்டுகளில் 48 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலாளா் எஸ்.ஆா்.செல்வம், சத்தியமங்கலம் நகரச் செயலாளா் ஓ.எம்.சுப்பிரமணியம், சத்தியமங்கலம் நகா்மன்ற உறுப்பினா்கள் லட்சுமணன், தனபாக்கியம், மீனவா் பிரிவு நிா்வாகி குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.