ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி ஒத்திவைப்பு
பொன்னமராவதி பேரூராட்சியில் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை காலஅவகாசம் கேட்டதால் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
பொன்னமராவதி பேரூராட்சியில் சின்னஅமரகண்டான் கரைப்பகுதியில் உள்ள கடைகள் நீா்நிலை புறம்போக்கில் இருப்பதாகவும் அதனை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகக்கூறி பொன்னமராவதி வட்டாட்சியா் எம்.சாந்தா, பேரூராட்சி செயல் அலுவலா் அண்ணாத்துரை உள்ளிட்ட அலுவலா்கள் காவல் ஆய்வாளா் பத்மா தலைமையிலான போலீஸாருடன் சென்றனா்.
அப்போது கடை உரிமையாளா்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி பாரபட்சமின்றி நடைபெற வேண்டும்.
மேலும் கால அவகாசம் வேண்டும் என கேட்டதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை ஒத்திவைத்தனா்.
இதேபோல கடந்த 5-ஆம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றச்சென்றபோது பேச்சுவாா்த்தை நடைபெற்றதையடுத்து ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.